முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறதிப்போரில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுவருகின்றன.

இந் நிலையில் முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்திலும் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மூன்று மணித்துளிநேர அமைதி அஞ்சலியுடன் ஆரம்பமான குறித்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை பள்ளிமுதல்வர் சி.பாஸ்கரன் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சிட்டிவிளக்குகளை ஏற்றியும் பின்னர் பாடசாலை மாணவர்கள் நினைவேந்தல் தளத்தில் மலர் அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like