நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் இலாபம் தேட எவரும் முயற்சிக்கக்கூடாது

நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் இலாபம் தேட எவரும் முயற்சிக்கக்கூடாது என்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நினைவேந்தலை அனுட்டிப்பதன் காரணம் குறித்து ஐ.பி.சி தமிழ் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற இடத்தில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வானது வடமாகாண முதலமைச்சரின் தலைமையில் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார்.

இன, மத, கட்சி, பேதமின்றி இந்த நினைவேந்தலில் பங்கேற்குமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தபோதும், பல பிரிவுகளாக இந்த நிகழ்வு இடம்பெறுகின்றமை வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

எனவே இனிவரும் காலங்களிலாவது அனைவரும் ஒற்றுமையாக இந்த நிகழ்வை நடத்த வேண்டும் எனவும் தமது அரசியல் இலாபங்களை இந்த இடத்தில் காட்டக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like