கிளிநொச்சியில் கண்ணீருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நினைவேந்தல்

கிளிநொச்சி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு கண்ணீர் மல்கி உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

குறித்த நினைவுகூரல் கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. கொல்லப்பட்டவர்களது ஆத்ம சாந்திக்காக மதப்பெரியோர்களால் இரங்கல் செய்திகளும், துன்பப்படும் மக்களுக்கான ஆறுதல் செய்திகளும் கூட்டுப் பிரார்த்தனைகள் மூலமாக வழங்கப்பட்டன.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like