மீண்டும் சேவை புறக்கணிப்புக்கு தயாராகும் மருத்துவர்கள்

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உட்பட சில விடயங்களை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சேவை புறக்கணிப்பில் ஈடுபட மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை, இலங்கை மருந்துச் சபை மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யாமை,

மேலும், தொழிற்சங்க தலைவர்களை அடக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகியவற்றை கண்டித்து இந்த சேவை புறக்கணிப்பு நடத்தப்பட உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like