போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டத்தாரிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று 87வது நாளாகவும் தொடர்கின்றது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டத்தாரி ஒருவர் அதிக மன அழுத்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

தங்களுக்கு ஏதாவது நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருந்த பட்டதாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களின் நிலை குறித்து யாரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. இந்நிலை தொடருமாக இருந்தால் இன்னும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளனர்.

 

You might also like