குழப்பவாதிகளால் முள்ளிவாய்க்கால் நிகழ்வின் அமைதியில் பாதிப்பு: சி.சிவமோகன் கண்டனம்

இன அழிப்பின் முடிவு நிலத்தில் அமைதியாக நடத்தப்பட்ட நிகழ்வு திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட வெளிமாவட்ட குழுக்களால் குழப்பியடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அமைதியை குலைத்து அஞ்சலி நிகழ்வை அசிங்கப்படுத்தியவர்களை நான் பகிரங்கமாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

அரசியல் செய்ய வேண்டுமென்றால் பதவிகளை பிடிக்க ஆசையிருந்தால் மக்களிடம் செல்ல வேண்டும். கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

அதை விடுத்து அமைதியான நிகழ்வுகளை குழப்பியடித்து பதவிகளை பிடிக்கலாம் என்றால் அது கானல் நீர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு எதிர்பார்ப்புக்களுடன் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் இன்று கால் பதித்தனர். வெறுமனே அரசியல் அடிமைகளாக ஒரு சிலர் செயல்பட்டனர்.

உயிரிழந்த எமது பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆத்மாக்களுக்காக அவர்கள் செய்தது அஞ்சலியாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி நிகழ்வில் கூக்குரலிட்ட பெண்களும், உளறித்தள்ளிய ஆண்களும் அமைதிக்காக கோயில் செல்லுங்கள் அல்லது உங்களை அந்த ஆத்மாக்கள் உருப்படவிடப் போவதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கடுமையாக கண்டித்துள்ளார்.

You might also like