மகிந்த, கோத்தபாய தலைமையில் போர் வெற்றிக் கொண்டாட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் நாளை போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் படைவீரர்களின் வெற்றி நினைவு நிகழ்வு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலக இலங்கைப் பேரவை தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் தேசிய படைவீரர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.

“வெற்றியீட்டிய தாய் நாட்டை பாதுகாப்போம் – படைவீரர்களை தனிமைப்படுத்த மாட்டோம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

பெத்த மாநாயக்க தேரர்கள் படைவீரர் குடும்பங்கள் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

படைவீரர்களுக்கு மரியாதை செலுத்த இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து தேசப்பற்றுடையவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

You might also like