வவுனியாவில் நினைவேந்தல் நிகழ்வில் இடம்பெற்ற உயர் அதிகாரியின் திருமண நிகழ்வு

நேற்று (18.05.2017) வடகிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் கண்ணீரில் மிதந்து நடைபெற்றுள்ளது.

நேற்றைய தினமே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வவுனியா மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் முடிவு எடுத்துள்ளதுடன் இத்திருமண நிகழ்விற்கு வவுனியாவிலுள்ள திணைக்களத்தலைவர்கள், குறிப்பாக பிரதேச சபைகள், நகரசபை, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகப்பணியாளர்கள் பலரும் சென்று இத்திருமண நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் உயர் பதவியிலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது திருமண நிகழ்வை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கும் தினத்தில் வைத்து மேலும் தமிழர்களின் உணர்வுகளை உசுப்பி விட்டுள்ளார்.

அவரின் ஆளுகைக்குள் வரும் திணைக்களப்பணியாளர்களும் இந்த களியாட்ட நிகழ்வில் பங்குகொள்வதற்காக சென்று வந்துள்ளனர். தமிழர்களை இந்நிலைக்குட்படுத்திய ஒரு இனத்தவர் தனது திருமணத்தை இத்தினத்தில் தெரிவு செய்துவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like