சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை கைது செய்ய நடவடிக்கை

சர்ச்சைக்குரிய பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கைது செய்ய தவறும்பட்சத்தில் நாட்டில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ்மா அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரை இன்று மாலை சந்தித்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மகஜரில் அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இஸ்லாம் மதம் மீதும், இஸ்லாமிய மக்கள் மீதும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் விசம கருத்துக்கள் அடங்கிய ஆவணங்களை பொலிஸ் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஞானசாரரின் நடவடிக்கை தொடர்பில் முஸ்லிம் மக்கள் விசனமடைந்துள்ளதாகவும், நல்லாட்சி அரசாங்கத்தில் நம்பிக்கை இழந்து வருவதாகவும் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமைச்சர் மனோகணேசன் அலுவலகத்தில் ஞானசார தேரர் அடாவடி!

https://youtu.be/4IIk9lIJ3AQ

 

You might also like