வவுனியாவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரினால் திறந்து வைப்பு

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் (வைரவர் கோவிலிற்கு அருகாமையில்) இன்று (19.05.2017) காலை 9.00மணியளவில் சிறுவர் பாதுகாப்பு இல்லம் (நந்தவனம்)  வடக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர்பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

இந் நிகழ்வில் வடமாகாண சிறுவர் நன்நடத்தை ஆணையாளர் விஸ்வரூபன், மாவட்ட சிரேஸ்ட நன்நடத்தை உத்தியோகத்தர் மனோகரராஜா, வடமாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் சத்தியசீலன், வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பா.சிந்துஜன், வவுனியாவை சேர்ந்த சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர்கள், அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like