ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவியேற்று இரண்டாண்டினை முன்னிட்டு விசேட வழிபாடுகள்

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவியேற்று இரண்டாண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது.

ஜனாபதிக்கு நல்லாசி வேண்டியும் நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டியும் இடம்பெற்ற இவ் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா தாண்டிக்குளம் கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் வன்னி பராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் மற்றும் கிராம சேவகர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட கிராம மக்கள் கலந்துகொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை மரநடுகையும் ஆலய வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

You might also like