வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகே யாழ் சுகாதாரத்திணைக்களத்தின் வாகனம் விபத்து

வவுனியா வசந்தி திரையரங்குக்கு முன்பாக நேற்று (18​.05.2017​) இரவு  யாழ் சுகாதாரத்திணைக்களத்திற்குச் சொந்தமான வான் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் பற்றி  மேலும் தெரியவருவதாவது,

வசந்தி திரையரங்குக்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.  எனினும் நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்திற்குள்ளான வான் இன்று (19)காலை 9.00மணிவரை அவ்விடத்தில் தரித்து நின்றுள்ளது. இன்று காலையே வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீதியின் நடுவே அமைக்கப்பட்ட விளம்பர பலகையுடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like