வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் சித்திரைப் புத்தாண்டு விழா

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (19.05.2017) காலை 9.00மணியளவில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உதவிக்கல்விப்பணிப்பாளர் மூ.த.சின்னையா , சிறப்பு விருந்தினராக பாடசாலை மேம்பாட்டு பிரதிநிதி ந.கிறேனியர், ஆசிரிய ஆலோசகர் கு.அருள்ராணி , வவுனியா முஸ்ஸிம் பாடசாலை ஆசிரியர் எ.ஜோய், ரி.சதீஸ் , பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் நடனம், குழுப்பாடல், கண்ணன் ராதை நடனம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன

You might also like