வவுனியா கற்பகபுரத்தில் 130 பேருக்கு காணி அனுமதிப்பத்திரங்கள்!!

வவுனியாவில் புதிய கற்பகபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 130பேருக்கு இன்று 08.01.2017 காலை 10.30மணியளவில் காணி அனுமதிப்பத்திரம் வஙழ்கிவைக்கப்பட்டது.

கடந்த கால யுத்தம் காரணமாக நலன்புரி நிலையங்களில் உறவினர்களின் வீடுகளில தங்கியிருந்தவர்களுக்கு புதிய கற்பகபுரம் பகுதியில் காடு அழித்து தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

பல வருங்களின் பின்னர் இன்று காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப. சத்தியலிங்கம், சிறிரேலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராஜா, அப்பகுதி கிராமசேவையாளர், காணி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர் அபிவிருத்திச்சங்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like