காணாமல் போன வயோதிபத் தாய் 2000 அடி உயரமான மலை உச்சியிலிருந்து மீட்பு

கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த, 90 வயதுடைய வயோதிபத் தாய் ஒருவர் 2000 அடி உயரமான மலை உச்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கம்பளை, புபுரெஸ்ஸ ரஜ தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

90 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே இரண்டு நாட்கள் முழுவதும் காணாமல் போயிருந்த நிலையில் புபுரெஸ்ஸ கலேகந்த மலை உச்சியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

பாறைச் சரிவு கொண்ட அடர்ந்த காட்டின் புதர்களுக்கு மத்தியில் உயரமாக உள்ள மலை உச்சிக்கு இந்த வயோதிபத் தாய் எவ்வாறு சென்றார் என்பது, கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாயின் ஐந்து பிள்ளைகள் திருமணம் செய்து ரஜதலாவ பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையில் யோசிக்கும் திறன் குறைந்த கடைசி மகனுடன் இந்த தாய் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ள இந்த தாயை கிராம மக்கள் அனைவரும் தேடி கண்டுபிடித்துள்ளனர்.

இளைஞர்கள் சிலர் இந்த மலை பிரதேசத்திற்கு சென்று தேடிய போதிலும் அவர்களால் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த இளைஞர்கள் மலை உச்சிக்கு செல்வோம் என எண்ணிய போதிலும் அவ்வளவு உயரத்திற்கு செல்வது குறித்து சற்று யோசித்துள்ளனர்.

எனினும் இறுதியில் இளைஞர்கள் குழுவினர் மலை உச்சிக்கு செல்வதற்கு தீர்மானித்து மலை உச்சிக்கு பயணித்துள்ளனர்.

அந்த மலை உச்சியின் கல் ஒன்றின் மீது இந்த தாய் அமர்ந்திருந்தனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு இரவுகள் முழுவதும் உணவு மற்றும் நீர் இன்றி இந்த மலை உச்சியில் இருந்துள்ளார். அதன் பின்னர் இந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

You might also like