சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டமும் சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதியும் திறந்து வைப்பு

வவுனியா சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்டம் மற்றும் சந்தைப்படுத்தல் கட்டிடத்தொகுதி இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஓமந்தை கிராமம் மாதிரிக்கிராமமாக தெரிவு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஓமந்தை பகுதி பயனிhளிகளுக்காக சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதிகளும் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் நீல் பண்டார கப்புகின்ன, சமுர்த்தி பணிப்பாளர்களான அனுரகுனசேகர வென்னப்புலி, கே.கே.எல்.சந்திர திலக, சி.டி. களுஆராச்சி, ஜே.கே. பத்மசிறீ, ரி.என். சஞ்சிவ்வாணி, பிரதி பணிப்பாளர் ரணவீர மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன், சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

You might also like