மஹிந்த ஆட்சிக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசமில்லை: கிளிநொச்சியில் பசுபதிப்பிள்ளை

நாட்டில் நிலவும் செயற்பாடுகளை பார்க்கும்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கும் பாரிய வித்தியாசமில்லை என வட. மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது உரையாற்றிய முதலமைச்சர் வடக்கில் யுத்தம் இல்லை. துப்பாக்கி சத்தங்கள் இல்லை என கூறினார்.

அந்த பேச்சுடனேயே நள்ளிரவு முகமாலை பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து 3 கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்தார்கள்.

இதேவேளை நேறறைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் கிளிநொச்சி நகரில் யுத்த வெற்றிக்காக தனி சிங்கள கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் மஹிந்த அரசுக்கும், நல்லாட்சி அரசுக்குமான வித்தியாசமின்மையையே எடுத்த காட்டுகின்றது என்றார்.

You might also like