வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டித்த ஏழு பேர் பணிநீக்கம்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு நினைவுச் சுடர் ஏற்றிய ஏழு ஊழியர்களை நிறுவனம் ஒன்று இன்று (19.05.2017) பணியிலிருந்து இடைநிறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள உதிரிப்பாகங்கள் மற்றும் வாகனங்கள் திருத்துமிடத்தில் பணியாற்றும் ஏழு தமிழ் இளைஞர்கள் நேற்று (18.05.2017) மாலை 5.40மணியளவில் வியாபார நிலையத்தில் தீபச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து இன்று (19.05.2017) வியாபார நிலையத்திற்குச் சென்ற வியாபார நிலைய உரிமையாளர் தமிழ் இளைஞர்களான வவுனியா, மீசாலை, விஸ்வமடு, மன்னார், வீரபுரம், பரந்தன் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 7பேரை பணியிலிருந்து இடைநிறுத்தியதுடன் பொலிஸ் நிலையத்திலிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

வியாபார நிலையத்தின் உரிமையாளர் பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like