காணாமல் போனதாகக் கூறப்பட்ட முன்னாள் போராளிகள் கொல்லப்பட்டதாக தகவல்

காணாமல் போனதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் கொல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரச படையினரால் காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் போரில் உயிரிழந்துள்ளனர்.

எட்டு ஆண்டுகளின் பின்னர் இந்த உண்மை அம்பலமாகியுள்ளது என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இந்தப் பெயர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் காணப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் இந்த 500 புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு பங்கின் அருட்தந்தை எழில்ராஜாவின் வழிகாட்டலில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் இந்த நினைவுத் தூபி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர் எனவும், அதனை நீதிமன்றம் இடைநிறுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிப் போராளிகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like