கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தாய்லாந்தில் இருந்து டோஹா நோக்கி பயணித்த விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் தரையிறக்கப்பட்டுள்ளது.

போயிங் 787 என்ற கட்டார் எயார்வேஸ் விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட புகை காரணமாக இந்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

208 பயணிகள் மற்றும் 15 ஊழிர்கள் இந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like