காதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த செயல்

காதலனுடன் தப்பிச் செல்ல 12 வயது பாடசாலை மாணவி செய்த மோசமான செயல் தொடர்பில் செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

குளியாப்பிட்டிய நகர் பகுதியில் உள்ள கழிப்பறை ஒன்றில் பாடசாலை சீருடையை மாற்றி வேறு ஆடையை அணிந்து காதலனுடன் தப்பிச் செல்ல குறித்த சிறுமி முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த சிறுமி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான செயலை பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கண்காணித்துள்ளனர்.எனவே பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த பொலிஸார்,சிறுமியை கைது செய்துள்ளனர்.

மரண வீடு ஒன்றில் வைத்தே,காதலனை சந்தித்ததாகவும் அவருடன் செல்வதற்காகவே இவ்வாறு திட்டமிட்டதாகவும் விசாரணைகளின் போது சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணையை தொடர்ந்து சிறுமியின் காதலனையும் குளியாப்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும்,சிறுமியின் காதல் விவகாரம் தொடர்பில் அறிந்திருந்த பெற்றோர் முன்னதாகவே எச்சரித்திருந்ததாகவும் தாயின் கையடக்க தொலைபேசியையே குறித்த சிறுமி காதலனுடன் உரையாட பயன்படுத்தி வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

குளியாப்பிட்டிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார பணியகத்தின் பொறுப்பதிகாரிகளின் கீழ்,தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like