வடமாகாண பெண்கள் சாரணிய பொது கூட்டம் வவுனியாவில் நடைபெற்றது!

வடமாகாண பெண் சாரணிய வருடாந்த பொதுக் கூட்டம் இன்று (20-05​-2017​) சாரணிய வடமாகாண ஆணையாளர் திருமதி.நீ.தர்மகுலசிங்கம் தலைமையில் வவுனியா சைவப்பிரகாசா மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்,ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் சாராணிய சங்கத்தலைவி அணோஜா பெனாண்டோ, பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் எம்,ராதாகிருஸ்ணன்

நல்ல தலைமைத்துவத்தை ஆண்களும் பெண்களும் இணைந்து கல்விகற்கும் பொது உருவாக்க முடியும் என குறிப்பிட்டார். அத்துடன் அந்த கலாசாரம் இன்று மாற்றமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

You might also like