விஸ்வமடுவில் சுழல்காற்றினால் தற்காலிக வீடு சேதம்

விஸ்வமடு நாதன் திட்டம் பகுதியில் இன்று வீசிய கடும் காற்றினால் அப்பகுதியிலுள்ள தற்காலிக வீடொன்றின் கூரை சேதமடைந்துள்ளது.

குறித்த வீட்டின் கூரை காற்றினால் தூக்கியெறியப்பட்ட போது அதிஷ்டவசமாக வீட்டில் இருந்த யாருக்கும் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லையென குறிப்பிடப்படுகின்றது.

நாதன் திட்டம் கிராமத்தில் பெரும்பாலும் மக்கள் தற்காலிக குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். சென்ற மாதம் அளவிலேயே இவர்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like