கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் : கிளிநொச்சியில் விஜயகலா

தீர்வு தீர்வென்று தீர்விற்காக நாம் பாடுபடக் கூடாது. ஏனெனில் கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

30 வருடங்களாக யுத்தம் நடந்த நிலையில் நாம் அந்த வடுக்களை இல்லாமல் செய்யவே பாடுபட வேண்டியிருந்தது. தற்போது அது நடைபெற்றுள்ளது.

ஆகவே தீர்வு தீர்வென்று நாம் தீர்விற்காக பாடுபடக் கூடாது. என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்கும். கடவுள் கருணை காட்டினால் மாத்திரமே தீர்வு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like