மூச்சுத் திணறி 15 நாள் குழந்தை பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடக்கும்புற தோட்டத்தில் 15 நாள் வயதுடைய குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தை தாய்ப்பால் அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மூச்சுத் தினறல் காரணமாக நேற்று மாலை இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது

இறந்த இந்தக்குழந்தையின் பிரேத பரிசோதனைகள்  இடம் பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like