யாழில் இரத்ததான முகாம் : குருதிக்கொடையாளர்களுக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் – ஏழாலை கிழக்கு Five Star விளையாட்டுக் கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக்கொடை முகாம் ஏழாலை கிழக்கிலுள்ள கழகத்தின் நட்சத்திரத் திண்ணைப் பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குருதிக்கொடை முகாம்  ஞாயிற்றுக்கிழமை (21) காலை-09 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது.

குறித்த விளையாட்டுக் கழகத்தின் தலைவர் க.அபராசுதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த குருதிக்கொடை முகாமில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் விபத்துக்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருடைய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளுக்காக இரத்தத்தின் தேவை அதிகமாகவுள்ளது.

ஆகவே, இந்த இரத்ததான முகாமில் குருதிக் கொடையாளர்கள் தாமாக முன்வந்து குருதிக் கொடை வழங்க வேண்டுமெனவும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

You might also like