சவூதி அரேபியா சென்ற இலங்கை பணிப்பெண்கள் மாயம்! தகவல் தெரிந்தால் அறிவியுங்கள்

சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்களாக சென்ற இரண்டு பெண்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண்களின் உறவினர்களே இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

எனவே, இந்த இரண்டு பெண்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் பொது மக்களின் உதவியை எதிர்பார்த்துள்ளது.

பூண்டலு ஓயாவைச் சேர்ந்த பெரியசாமி முத்து மாரியம்மா மற்றும் பிபில, மெதகமயைச் சேர்ந்த டீ.எம்.கருணாவத்தி ஆகியோர் முறையே 2012 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் சவூதி அரேபியாவிற்குப் பணிப்பெண்களாகச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு தொடர்பு பிரிவு 0114 379328 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறு, பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like