காணாமல்போனோரின் தகவல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயார்: ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான தெளிவான தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (20.05.2017) சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்தகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை விபரங்களை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான குழு ஒன்று நியமிக்கப்படவிருக்கின்றது. இன்று மக்களைத் திசை திருப்புவதற்கான பல இனவாதச் செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் தற்போது நிலவும் சமாதானத்தினை சுதந்திரத்துடன் அனுபவிப்பதற்கு மக்கள் தெளிவாக சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

You might also like