நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு!

நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் பாதுகாப்பான முறையில் காப்பாற்றப்பட்டுள்ளனர் என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று நாகை அருகே இலங்கை மீனவர்கள் இரண்டு பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை அவர்களின் படகு இயந்திரக் கோளாறு காரணமாக இயங்காமல் இருந்துள்ளது.

இந்நிலையில், அங்கு சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

4 நாட்களாக கடலில் தத்தளித்த பருத்தித்துறையைச் சேர்ந்த ஸ்டீபன், வினோத் ஆகிய இருவருமே மீட்கப்பட்டவர்களாவர்.

இதேவேளை நேற்று முந்தினம் ஆற்காட்டுத்துறையை சேர்ந்த 5 மீனவர்கள் காணாமல் போயிருந்தனர் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த அந்த ஐந்து மீனவர்களையும் நாகை மாவட்ட மீனவர்கள் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like