இலங்கைக்குள் புகுந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்! ஆட்களை சேர்க்க பிரச்சாரம்

இலங்கையர்கள் சிலர் சிரியாவுக்கு சென்று ஐ.ஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வுத் தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 50 முதல் 60 பேர் இவ்வாறு ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்த அதிகமானோரே இவ்வாறு இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக வெளிநாடு ஒன்றில் இருந்து வருகைதந்த குழுவினர், ஐ.எஸ் அமைப்பு தொடர்பான பட்டறை ஒன்று நடத்தியுள்ளதாக புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து இலங்கையர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியிருந்தது. அதற்கான ஆதாரங்களும் வெளியிட்டிருந்தது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கண்டியை சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்காவின் வான் தாக்குதலில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like