அமெரிக்கா இராணுவ முகாமில் கொள்ளையடித்த வாகனங்கள் இலங்கையில் விற்பனை

தென் கொரியாவிலுள்ள அமெரிக்க இராணுவ முகாமிருந்து திருடப்பட்ட வாகனங்களை, இலங்கையில் விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கப் படைவீரர் ஒருவரும் ஆறு தென் கொரியப் பிரஜைகளும் இணைந்து, திருடிய அமெரிக்க இராணுவ வாகனங்களை இலங்கையில் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.

இவ்வாறு திருடப்பட்ட மூன்று Humvees ரக வாகனங்களில் இரண்டு வாகனங்களை இலங்கைக்கு விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்தாண்டு ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இராணுவ தளத்தில் இருந்து மூன்று Humvees வாகனங்களை திருடியவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் 47 வயதான கொரிய நாட்டு அமெரிக்க படைவீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனங்களுக்கு கவசம் பயன்படுத்தப்பட்டு திருடியுள்ளதாக சியோல் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் ஏஜென்சியின் சர்வதேச குற்ற விசாரணை பிரிவு பிரதான அதிகாரி Kim Dong Hwan தெரிவித்துள்ளார்.

எனினும் மற்ற வீரர்களுடன் இணைந்து தான் வாகனங்களை திருட முயற்சிக்கவில்லை என்று குறித்த படைவீரர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொரியர்கள் முதலில் தாம் செய்த தவறை மறுத்துள்ளனர். எனினும் Humvees ரக வாகனங்களை தாம் விற்க முயன்றதாக அண்மையில் தெரிவித்துள்ளனர்.

Humvees வாகனம் ஒன்று முதலில் கிட்டத்தட்ட 10,000 அமெரிக்க டொலருக்கு திரைப்பட தயாரிப்பாளருக்கு விற்கப்பட்ட போதிலும் பொலிஸார் அதனை கண்டுபிடித்து திரும்ப பெற்றுள்ளனர்.

எனினும் பின்னர் இலங்கை, கம்போடியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு மற்ற இரண்டு Humvees வாகனங்களை விற்க முயன்றபோதே பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like