விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வருகிறது!

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருப்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு முதலமைச்சர் கனவு காண்கிறார். விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவரது எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற மாட்டாது.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு நாம் தயாரில்லையெனவும், அவர் கூறும் விதத்தில் வடக்கிலிருந்து இராணுவத்தை மீளழைப்பதற்கு ஒரு போதும் முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like