இரவோடு இரவாக சந்தித்த மைத்திரி, ரணில் : அமைச்சரவையில் மாற்றமா?

கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கையின் அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முதலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பில் ஈடுப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த அவசர சந்திப்பில் நாளை நடைபெறவிருக்கும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் அதிக விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, அனைத்து அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு என்ன அமைச்சுக்கள் ஒதுக்கப்படவுள்ளன என்ற விடயங்கள் இதுவரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக தகவல் எதுவும் இந்த அவசர சந்திப்பில் வெளியிடப்படுமா என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

 

You might also like