ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படும்?

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.

வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் இவ்வாறு ஜூலை மாதம் கட்டண அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட உள்ளது.

ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.

இம்முறை சிறியளவில் பஸ் கட்டணங்கள் உயர்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சு எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like