கிளிநொச்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐந்து பொலிஸ் குழுக்கள்

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் வாகனம் மீது கடந்த 19ம் திகதி அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு, பொலிஸ் விசேடப் பிரிவு, பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட ஐந்து பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You might also like