முகமாலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்: முக்கிய தடயங்கள் கண்டெடுப்பு

முகமாலை பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன்  குறித்த பகுதியில் தாக்குதலிற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்றின் இலக்கமும் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

அத்துடன் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் கையுறைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் முக்கியமான தடயங்கள் தமக்குக் கிடைத்துள்ள நிலையில் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்யமுடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like