இந்தியாவின் நவீன ஆழ்கடல் பாதுகாப்புக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!

ஆழ்கடல் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளின்போது பாதுகாப்புக்கான நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான சுமேதா எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தக்கப்பல், நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு வந்துள்ளதுடன் இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து பல பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பதுடன் பயிற்சி நடவடிக்கை, கலாசார வேலைத்திட்டங்கள் மற்றும் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை இந்திய கடற்பிராந்தியங்களில் நிலவும் கடத்தல் சம்பவங்கள் மற்றும் பயங்கரவாத ஊடுருவல் போன்றவற்றை அவதானிக்கும் நோக்குடன் இலங்கைப்படையினருடன் இணைந்து பல விசேட நடவடிக்கைத் திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

You might also like