சற்றுமுன் அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவை மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்பது பேரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்பற்துறை அமைச்சராக மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றம் மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சராக கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோலிய வள மற்றும் அபிவிருத்தி அமைச்சராக அர்ஜூன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராக சந்திம வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் தொழிற்சங்கம் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராக ஜோன் செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமை பொறுப்புக்கள் அபிவிருத்தி அமைச்சராக திலக் ஜானக மரபன நியமிக்கப்பட்டுள்ளார்.

 

You might also like