வவுனியாவில் 88ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு தான் எப்போது?

வவுனியாவில் கடந்த 88ஆவது நாளாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே  இன்று (22​..05.2017​) 88ஆவது நாளாக தமது சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைவாக கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில் சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like