கிளிநொச்சி வைத்தியர்கள் அடையாள பணி பகிஷ்கரிப்பு! நோயாளிகள் அவதி

மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை அரசுடைமையாக்குமாறு கோரி நாடு முழுவதிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள வேளை கிளிநொச்சி வைத்தியர்களும் அடையாள பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இது இலங்கை வைத்திய சேவையில் தரமற்ற வைத்தியர்களை உள்வாங்கும் செயற்பாடாகும். பணத்துக்காக நோயாளர்களின் உயிரைப் பணயம் வைக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு எதிரான போராட்டம்  எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று (22.05.2017) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு முழுமையாக இயங்கவில்லை

You might also like