வீட்டை உடைக்குமாறு உத்தரவு! அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட நபர்

தான் வசிக்கும் வீட்டை உடைக்கும் காட்சியை காண முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவிற்கமைய தான் வசிக்கும் வீட்டை உடைப்பதற்காக பொலிஸார் சென்றமையினால், மனவிரக்தியடைந்த நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

குருந்துவத்தை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய எம்.சீ.டயஸ் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அவரது இறுதி சடங்கு நேற்று ஞாஎல ரோமன் கத்தோலிக்க கல்லறையில் இடம்பெற்றுள்ளது.

நீண்ட காலமாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் மற்றைய தரப்பு வெற்றிபெற்றமையினால், அந்த வீட்டை உடைத்து சொத்தினை மற்றைய தரப்பிடம் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் பெக்கோ இயந்திரத்துடன் சென்றவுடன் குறித்த நபர் உடலுக்கு தீ வைத்து கொண்டுள்ளார்.

அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக ராகம வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like