கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குடியரசு தின நினைவு நிகழ்வுகள்

இலங்கை குடியரசு தினத்தினை நினைவுகூரும் நிகழ்வு இன்று(22) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் அரசாங்க அதிபர் தலைமை உரை ஆற்றியிருந்தார்.

குறித்த உரையில்,

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதியிலிருந்து இலங்கை பிரித்தானிய காலணித்துவத்திலிருந்து மீண்டபோதிலும் தொடர்ந்தும் பிரித்தானிய அரசின் கிரீடத்தின் கீழ் டொமினிக் நிலைமையுடைய சுதந்திரமொன்று மட்டும் உரித்தாக இருந்தது.

ஆனால் 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்புடன் இலங்கை மக்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற முழுமையான இறைமையுடைய மற்றும் சுதந்திர அரசாக ஆகியது.

இந்த குடியரசு உருவாவதற்கான சந்தர்ப்பங்கள், இவற்றுக்காக தலைமையேற்ற தலைவர்களின் பங்களிப்புக்கள், இலங்கை குடியரசு ஆகியமையால் நாட்டு மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதங்கள் போன்றவை பற்றி அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உதவி திட்டப் பணிப்பாளர் கேதீஸ்வரனும் குடியரசு தினம் பற்றி உரையாற்றியிருந்தார்.

மேலும், இந்த நிகழ்வின் போது அனைத்து செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like