முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளை சந்தித்த ஜப்பானிய தூதரக அதிகாரி

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதரக அதிகாரி மிசாகோ தகஜம் மற்றும் இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்த நிரோசா வெல்கம ஆகியோர் கிளிநொச்சி முகமாலைப் பகுதிக்குச் சென்று கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சியில் யுத்தத்தின் பாதிப்புக்கள் அதிகமாக காணப்படுகின்ற இடமாகவும், உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் அதிகளவில் காணப்படுகின்ற பகுதியாகவும் கிளாலி தொடக்கம் நாகர் கோவில் வரைக்குமான பகுதிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் தற்போது சர்வதேச நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை முகமாலைப் பகுதியில் ஜப்பானிய மக்களினது நிதி பங்களிப்புடன் டாஸ் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் வெடிபொருட்கள் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் இந்த பகுதியில் மீள்குடியேற்றத்திற்குப் பின்னர் வெடிபொருட்களின் மூலமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like