வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை இன்று (22.05.2017) மதியம் 2.30மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார் 24,000 பெறுமதியான கமரா , 18,000 பெறுமதியான சம்சோங் தொலைபேசி , டயலோக் அட்டை என்பன கலவாடப்பட்டுள்ளது.
மாலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் உடைத்து களவாடப்பட்டுள்ளதையறிந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.