பெண்ணின் மரணத்திற்கு யார் காரணம்? யாழில் சுவரொட்டிகள்

யாழ். கரவெட்டி வடக்கு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் உயிரிழப்பிற்கு மருத்துவ தவறே காரணம் என தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வலிப்பு நோய் காரணமாக கடந்த ஒன்பதாம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் உயிரிழந்திருந்தார்.

கரவெட்டி வடக்கு பகுதியை சேர்ந்த த.மரியலீலா என்ற 48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், வலிப்பு நோயுடைய ஒருவருக்கு மாரடைப்பு மருந்தினை உபயோகித்து சில நிமிடங்களில் உயிரை பறித்துள்ளதாக அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறான வைத்தியர்களினால் எத்தனை உயிர்கள் பறிபோகும் எனவும் அந்த துண்டு பிரசுரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like