வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் மீது கல் வீச்சு தாக்குதல்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று (22.05.2017) மதியம் 2.45மணியளவில் கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்து மீது  வவுனியா ஈரப்பெரியகுளம் குருந்துபிட்டிய இராணுவ முகாமிற்கு அருகே மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் இ.போ.ச பேரூந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்ப்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை

பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேரூந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேரூந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like