கிளிநொச்சி – பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பூநகரி சங்குப்பிட்டி மன்னார் ஏ-32 வீதி புனரமைக்கப்பட்டபோதும் இவ்வீதியில் அமைந்துள்ள மிகப்பெரிய பாலமான மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்படாமல் காணப்பட்டது.

இந்த நிலையில், குறித்த பாலத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மழை காலங்களில் வீதியை குறுக்கிட்டு மழை வெள்ளம் பாயும் போது படகு மூலமான போக்குவரத்துக்களே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாலத்திற்கான கட்டுமானப்பணிகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு தற்போது புனரமைப்பின் போது போக்குவரத்துக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதிக்கு முன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like