வவுனியாவில் இளைஞர் தினம் அனுஸ்டிப்பு (படங்கள் இணைப்பு)

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் அவர்களின் ஏற்பாட்டில் ஓமந்தை இளைஞர் கழகத்தின் முழுப்பங்களிப்புடன்   ஓமந்தை ஆரம்ப மருத்துவப்பிரிவு  வைத்தியசாலையில்   இளைஞர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

ஓமந்தை ஆரம்ப மருத்துவப்பிரிவு வைத்தியசாலையில் சிரமதானப்பணிகளுடன்  சுற்று மதிலுக்கு வர்ணம் பூசப்பட்டு மர நடுகை வைபவமும் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வவுனியா  நகரசபையின் முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரக்கோன், ஓமந்தை கிராம சேவையாளர் அனுசியா, வவுனியா மாவட்ட இளைஞர்  சம்மேளன தலைவர் சு.காண்டீபன், முன்னாள் வவுனியா மாவட்ட இளைஞர்  சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், கிராம முக்கியஸ்த்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

You might also like