வன்னி மாவட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் கிடைத்த அரியவாய்ப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு என்னுடன் இணைந்து தேர்தலில் பணியாற்றி பட்டதாரிகளுக்கு 2011ஆம் ஆண்டு அரச சேவையில் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது . இவ்வாறு இன்று வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதார்கள் சங்கத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுடனான சந்திப்பில் இணைப்பாளர் திரு. ம. ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2010ஆம் அண்டு இடம்பெற்ற தேர்தலின்போது என்னுடன் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்கள் அவர்களை வைத்து மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி அவர்களை இணைத்து சங்கங்களை உருவாக்கி அவர்களிடையே ஒவ்வொரு தலைவரையும் நியமித்து அதில் வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவராக நான் செயற்பட்டிருக்கின்றேன்.  ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குக்கீழ் செயற்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் ஏமாற்றியுள்ளார். ஆனால் 2010ஆம் ஆண்டு நான் ஒருங்கிணைத்த பட்டதாரிகளுக்கு 2011ஆம் ஆண்டு அரச சேவையில் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போது வன்னி மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளராக குறுகிய காலத்திற்குள் அரசியலுக்கு வந்து கே. காதர் மஸ்தான் செயற்பட்டு வருகின்றார். அவருக்கு எங்களுடைய மக்கள் மத்தியிலே செல்வாக்கு இருக்கின்றது. இருந்தாலும் அரசியல் என்ற ரீதியில் நோக்குகின்றபொழுது தனித்தனியாக நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றது அதற்கேற்ப செயற்படவேண்டிய தேவை உள்ளது. என்ற மேலும் தெரிவித்தார்.

இன்றைய ஸ்ரீலங்கா பட்டதாரிகள் சங்க கலந்துரையாடலின்போது நூற்றிக்கும் மேற்பட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ​

https://youtu.be/Tnyec8vORsA

You might also like