யாழ்தேவி ரயிலில் பாய்ந்து பாடசாலை மாணவன் தற்கொலை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலில் பாய்ந்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்திலுள்ள பிரபல பாடசாலையின் மாணவ தலைவர் ஒருவரே இன்று தற்கொலை செய்துள்ளார்.

இம்முறை வணிக பிரிவில் உயர்தரம் பரீட்சை எழுதவிருந்த பிஷான் ஜயவர்தன என்ற 18 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

அனுராதரபுரம் புபுது மாவத்தையில் வசிக்கும் மாணவரே தற்கொலை செய்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவரின் சடலம் அதே ரயிலில், ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த இடத்திற்கு பாடசாலை அதிபர் உட்பட பல ஆசிரியர்கள் மற்றும் அனுராதபுரம் பொலிஸ் தலைமையக அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like